Theft of tires from parked lorry near in Perambalur
பெரம்பலூர் அருகே நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டயர்கள் உள்பட சக்கரங்களையும் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்றிரவு வேப்பந்தட்டையில் உள்ள
பெட்ரோல் பங்க் அருகில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைத்துள்ளார்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் உள்ள சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டயர் மற்றும் சக்கரங்களையும் மர்மநபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டயர்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.