There are government funded work on the update Elampalur thirumankaliyamman Temple cart near in perambalur பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேசுவர் மற்றும் திருமங்கலியம்மன் கோவில் தேர் பழுதடைந்து, சுமார் 40ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதனால் தேர்த்திருவிழா நடைபெறாமலேயே இருந்தது.

பழுதடைந்த தேரை புதுப்பிக்குமாறு எளம்பலூர் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் எம்.எல்.ஏ. முதல்அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக புதுப்பிக்கும் பணி மேற்கொள்வதற்கு தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்திரவிட்டார். அதன் பேரில் ரூ.25 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவில் தேர் புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருமங்கலிஅம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மு.ராஜாராம், சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா, ஏகாம்பரேசுவரர் கோவில் அர்ச்சகர்கள் தண்டபாணி, மனோகரன், ஸ்தபதி அரும்பாவூர் கணேசன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!