There is no official authority to file a petition in Co-operative Societies! : Not at all in the office !! DMK Demonstration in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் புஜங்கராயநல்லூர் மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களின் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு ஆளும் கட்சியினருக்கு பயந்து மனு வாங்க அதிகாரிகள் வர வில்லை, எனக் கூறிய திமுகவினர், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெரம்பலூர் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு முறையிட சென்றனர். ஆனால், அங்கு, அலுவலகத்திலும் அலுவலர்கள் யாருமில்லை. ஏமாற்றமடைந்த திமுகவினர், இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வாசல் முன் அமர்ந்து காணோம் காணோம்! அதிகாரிகளைக் காணோம்!! என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கல்நது கொண்ட திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு துணைப் போவதாகவும் தேர்தலை முறையாக நடத்த வில்லை எனவும் முறையாக தேர்தல் நடத்தா விட்டால் திமுக சார்பில் அடுத்தகட்ட போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர் அணி செந்தில்நாதன், பெரம்பலூர் நகர செயலாளளர் ம.பிரபாகரன், உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!