There previewed sittali village near In Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள சித்தளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேர் சுமார் ரூ. 5லட்சம் மதிப்பில் சக்கரங்கள், மற்றும் தேர் மராமத்து பணிகள் செய்யப்பட்டு இன்று திருத்தேர் வெள்ளோட்டம், சித்திளி கிராம முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில், சித்தளி, பேரளி, அந்தூர், அசூர், ஒதியம், எழுமூர், உள்ளிட்ட பல கிராம மக்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கிரராம முக்கிய பிரமுகர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.