Thiyakarajapakavatar’s 59th anniversary Day in Namakkal
நாமக்கல்லில், மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜபாகவதரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் தியாகராஜபாகவதர் நற்பணி சங்கத்தின் சார்பில் பாகவதரின் 58வது நினைவு நாள் நிகழ்ச்சி மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. சங்க நிறுவனத் தலைவர் கோட்டை கோபாலன் தலைமையில் பாகவதரின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன், துணை செயலாளர் நடராஜன், செல்வராஜ், மனோகர், பாரதி, மாது, குமார், ஞானப்பிரகாஷ், நரசிம்மன், பிரகாஷ், மணிவண்ணன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.