Those serving the invitation to receive the award for the advancement of our beloved Ambedkar SC
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வருபவர்கள் அண்ணல் அம்பேத்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் : தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கார் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில் 2017-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கார் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணைய தளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.