Those who apply for the answer sheet copy will be downloaded tomorrow
பெரம்பலூர் : நடைபெற்று முடிந்த மார்ச் 2017 மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 02.06.2017 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பினை click செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இருநகல்கள் எடுத்து 03.06.2017 பிற்பகல் 1.00 மணி முதல் 06.06.2017 வரையிலான (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) தேதிகளில் மாலை 6.00 மணிக்குள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.