Those who did not renew their jobs at the Job Opportunity Office Update: Jan 24

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2011, 2012, 2013, 2014, 2015 2016 – ம் ஆண்டுகளில் தங்களது பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின்கீழ் புதுப்பித்தல் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வருகிற ஜன. 24ம் தேதிக்குள் தங்களது பதிவை ஆன்லைன் மூலமாக tnvelaivaaippu.gov.in என்ற வெப்சைட்டில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

2011, 2012, 2013, 2014, 2015, 2016 – ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 01.01.2011 முதல் 31.12.2016 வரை இருக்குமாயின், இந்த சிறப்பு சலுகை அவர்களுக்கு பொருந்தும். ஆன்லைன் மூலமாக சலுகையின் கீழ் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, சாதிச்சான்று ஆகியவற்றுடன் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். 2019 ஜன. 24க்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!