பெரம்பலூர் : பெரம்பலூரில் 100 ஆண்டு பழமையான மதன கோபால சுவாமி கோயில் தேர் ரூ. 40 லட்சம் செலவில் மறு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
பெரம்பலூர் மரகதவல்லித் தாயார் சமேத மதன கோபால சுவாமி (பெருமாள்) கோயில் உள்ளது. மகா பாரத காலத்து பஞ்ச பாண்டவர் பூஜித்த ஸ்தலமாகவும், வியாக்ரபாத முனிவர் அருள் பாலித்த ஸ்தலமாகவும் இந்தக் கோயில் கூறப்படுகிறது.
1000 ஆண்டு பழமையான இந்தக்கோயில் தற்போத இந்து சமய அறநி லையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. கோயிலின் முன்பு 40 அடி உயரத்திற்கு ஒரே கல்லால் ஆன கம்பத்து ஆஞ்சநேயர் கல் தூண் உள்ளது இந்தக் கோயிலுக்கு உரிய தனிச் சிறப்பாகும்.
ஆண்டு தோறும் காவிரியிலிருந்தும் கங்கையிலிருந்தும் புனித நீர் சுமந்து வந்து இந்தக் கல்தூணுக்கு வழிபாடு செய்யப் படுவது வழக்கம்.
மேலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தன்று இந்தக் கோயிலில் தேரோட்டம் நடத்தப்படும். நூற்றாண்டு பழமையான தேர் பழுதடைந்து காணப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடத் தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பாக பழைய தேரை இலுப்பை மரத்தால் புதுப்பிக்கத் திட்டமி டப் ட்டு, மறு சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
பொது மக்களிடமிருந்து திரட்டப் படும் நிதி மூலம் சுமார் ரூ. 40 லட்சத்தில் இந்தத் தேர் புதுப்பிக்கப் பட உள்ளது.
கடந்த ஜுன் 1ம் தேதி தேர் புதுப்பிக்கும் பணி தொடங்கப் பட்டது. இதற்காக தேரினை பிரித்தெடுக்கும் பணி கடந்த ஆண்டு ஜுன்-21ம் தேதி நிறைவுற்றது.
அதன் பின் தேர்கட்டுமானம் துவங்கியது. சில வாரங்களுக்கு முன்பு திருத்தேர் திருப்பணி நிறைவுற்றது. இன்று அதன் வெள்ளோட்டம் நடந்தது.
கோவில் வளாகத்தில் புறப்பட்ட திருத்தேர் பெரிய தெற்குத் தெரு, ஐயப்பன் கோயில் தெரு, கடைவீதி வழியாக சென்று இன்று மாலை கோவில் வளாகத்தை வந்தடைந்து.
இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பெரம்பலூர், துறைமங்கலம்,அரணாரை, எளம்பலூர், விளாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.