TNPSC Group Exam 2 Free Training Courses: Namakkal Collectorate Information
டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதனைதொடர்ந்து இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் நாளை 13ம் தேதி புதன் கிழமை காலை 10.30 மணியளவில் நடத்தப்படுகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பில் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித்தேர்வு எழுதும் இளைஞர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.