To increase the age limit of those who go to work in Malaysia, talks with the Minister of Labor Welfare: Interview with the Minister of Home Affairs, Dato Hamza bin Zainuddin, who came to Poolambadi!
மலேசிய நாட்டில் முக்கிய தொழில் அதிபராக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளார். அவரது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடிக்கு சிறப்பு விருந்தினராக இன்று வந்திருந்த மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன், செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது தமிழகம் வந்துள்ளதாகவும், நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் சந்திப்பிற்கு பிறகு அவரிடம் என்ன பேச்சு வார்த்தை நடத்தினேன் என்று குறித்து தெரிவிக்கிறேன் என்று கூறினார். அதனையடுத்து தமிழகத்தில் இருந்து மலேசிய நாட்டிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 45 ஆக வைத்திருப்பது குறித்த கேட்டபோது, சுறுசுறுப்புடன் மலேசிய நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இருப்பினும் இதனை மாற்றி அமைப்பது குறித்து மலேசிய நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்.
50,000 அமெரிக்கன் டாலர் முதலீடு இருந்தால் மலேசியாவில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்று தெரிவித்த அமைச்சர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக வரலாம் என்று தெரிவித்தார்.
மலேசிய நாட்டில் 20 ஆண்டுகள் தங்குவதற்கு இன்வெஸ்ட்மென்ட் விசா என்று அழைக்கப்படும் பிரீமியம் விசா எடுத்துக் கொள்ள வேண்டும் என்றவர் தகுதியானவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குப் பிறகு மலேசிய நாட்டின் சுற்றுலாத்துறை மந்தமாகவே உள்ளது இதனை சரி செய்வதற்கு மிக குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கோலாம்பூரும் வந்து செல்கின்றனர். இந்தியா ஒரு நாள் உலக நாடுகளின் சுப்ரீம் பவர் நாடாக மாறும். அதற்கு வாழ்த்துகள் என்றார். பேட்டியின் போது, நாமக்கல் எம்.பி சின்னசாமி டத்தோ. பிரகதீஸ்குமார் மற்றும் சூரியபிரகாசம், கொங்கு ஐஸ்கிரீம் சிவா, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
டத்தோ. பிரகதீஷ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டும், மலேசியா உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன் இந்தியா வந்ததற்கும் டத்தோ.பிரதீஸ்குமாரின் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மலேசியா தொழிலதிபர் டத்தோ பிரதீஸ்குமார் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன் வந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விளம்பரம்: