To mark the 109th birthday of Perarignar Anna cycle race took place this morning

பெரம்பலூர்: பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று நடைபெற்ற மிதிவண்டிப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் (09.09.17) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தொடங்கி வைத்தார்.

இப்போட்டிகளில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள், 30 மாணவியர்கள் என மொத்தம் 80 நபர்கள் பங்கேற்றனர். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே 13-வயதுக்குட்பட்ட பிரிவினர், 15-வயதுக்குட்பட்ட பிhpவினர், 17-வயதுக்குட்பட்ட பிரிவினர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

மாணவர்களுக்கான 13-வயதுக்குட்பட்ட பிரிவில் கோல்டன் கேட்ஸ் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவன் எஸ்.அறிவழகன் முதலிடத்தையும், 15-வயதுக்குட்பட்ட பிரிவில் பாடாலூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவன் பி.சாந்தகுமார் முதலிடத்தையும், 17-வயதுக்குட்பட்ட பிரிவில் காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வி.பாலகுமார் முதலிடத்தையும் பெற்றனர்.

மாணவியர்களுக்கான 13-வயதுக்குட்பட்ட பிரிவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெ.கே.செந்தமிழ் முதலிடத்தையும், 15-வயதுக்குட்பட்ட பிரிவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ரோஸினி, முதலிடத்தையும், 17-வயதுக்குட்பட்ட பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி. பிரியா முதலிடத்தையும் பெற்றனர். அதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தடகள பயிற்றுனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!