To marry at the car in Perambalur the kidnapping of a college student: Villupuram police rescue

பெரம்பலூர் அருகே காரில் கடத்தபட்ட கல்லூரி மாணவியை உறவினர்கள் அளித்த புகாரின் போரில் விழுப்புரம் மாவட்ட போலீசார் மீட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் அருகே உள்ள புதுபேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயராமன். விவசாயி. இவரது மகள் தீபிகா (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

தீபிகா தினமும் பெரம்பலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக புதுப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு காலை 7 மணிக்கு வந்து செல்வது வழக்கம். அதே போல் இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக தீபிகா பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் நின்று கொண்டிருந்த தீபிகாவை தீடீரென வலுகட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கல்லூரி மாணவி கடத்தல் சம்பவத்தை மங்களமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தீபிகாவை கடத்தி கார் சென்னை நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் தெரிந்த உடனே விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் கெடுத்தனர்.

தகவலின் பேரில், விழுப்புரம் சுங்க வரி கட்டண வசூல் மையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது தீபிகாவை கடத்தி வந்தது தெரிய வந்ததும், கடத்தியது கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் விக்னேஷ்வரன் (வயது 24) என்பதும் தெரிய வந்தது. மேலும், விசாரணையில் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது தனது உறவினர் மகளான தீபிகாவை நேரில் பார்த்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டுள்ளார். ஆனால், தீபிகாவே விக்னேஷ்வரனுக்கு சின்னம்மா மகள் ஆவார் திருமணம் செய்து கொள்ள முறை இல்லாததால் தீபிகா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ்வரன் தீபிகாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்து இன்று புதுபேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தீபிகாவிடம் திருமணம் செய்து கொள்ளும் படி விக்னோஷ்வரன் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதனால் தான் கடத்தியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!