Today is International Girl Child Day; Congratulations to Perambalur Collector Santha!

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்பினையும் பாதுகாப்பான சமூக சூழ்நிலைகளையும் உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும் அவர்களின் எதிர்கால வாழ்வின் அங்கீகாரம் குறித்தும் பொதுமக்களிடையே விழ்ப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இவ்வாண்டிற்கு (MY VOICE MY EQUAL FUTURE) எனது குரல், எனது சரிசமமான எதிர;காலம் என்ற கருத்துடன் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் முன்னேறிய சமூகமே உயர்ந்த சமூகம் ஆகும். பெண்களை மையமாக கொண்டே நமது பாரம்பரிய சமூகம் இயங்கி வருகின்ற பொழுதிலும் பெண்களின் வளர்ச்சியே சமுதாய மேம்பாட்டின் அடையாளம் என பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் மகத்துவம் குறித்து நாம் அனைவரும் அறிந்திருந்த போதிலும் அவர்களின் எதிரகால வாழ்க்கைக்கு தேவையான கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தளவு முக்கியத்துவமே அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளுக்கும் கல்வி கற்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் ஒரு பெண் கல்வி கற்று தமக்கு மட்டும் அல்லாமல் தன்னையும், தன்னை சார்ந்தவர்களுக்கும் ஒளி விளக்காய் திகழ்ந்து வாழ்வில் சிறந்து விளங்கி சமுதாய முன்னேற்றத்திற்கு பணியாற்றுவார்கள்.

பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் பொருட்டு தங்களது சமூக பொறுப்பினை விரைந்து முடித்திட வேண்டும் என்ற எண்ணத்தினால் விழிப்புணர்வின்றி திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் பெண் குழந்தைகளின் மனநலம், உடல்நலம் பெண்களின் மன தைரியம், முன்னேற்றம், இலட்சியம் பாதிக்கப்படுவதோடு எதிர்கால வலிமையான சமுதாயம் உருவாவதும் தடைபடுகிறது.

பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தருவதோடு பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையற்ற, பாதுகாப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்திடலாம்.

பெண்கள் சுய சார்புடன் பிறர் துணையின்றி சமூக அந்தஸ்துடன் வாழ கல்வி அறிவு இன்றியமையாதது ஆகும். அத்தகைய கல்வியினை தங்களது குழந்தைகளுக்கு அளித்து தைரியத்துடனும், சுதந்திரத்துடனும் சமூகத்தினை எதிர்கொள்ளவும் பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்.

பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், கல்வி கற்க செய்திடவும் அரசு பல்வேறு கடும் சட்டங்களை இயற்றி நடைமுறைபடுத்தி வந்தாலும் பொதுமக்களிடையே ஒத்துழைப்பு மற்றும் விழ்ப்புணர்வு இருந்தால் மட்டுமே பெண் குழந்தைகளின் வாழ்வு சிறப்படையும். அனைத்து பெண்குழந்தைகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என அதில் தெரவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!