Toilet waste into drinking water wells in the vicinity of the school that opened ïcivilians have petition with the authorities ignored !!

பெரம்பலூரில் குடிநீர் கிணறு அருகே தனியார் பள்ளி ஒன்று கழிப்பறை கழிவுகளை திறந்த வெளியில் விட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உப்போடை அருகே ராமக்கிருஷ்ணா பள்ளியின் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை முறை பள்ளம் தோண்டி தேக்கி வைக்காமல், பெரம்பலூர் நகர மக்களுக்காக வினியோகிக்கப்படும் குடிநீர் கிணறு அருகிலேயும், அதிகளவில் பொதுமக்கள் சென்று வரக்கூடிய பகுதியிலேயும் கழிப்பறை கழிவுகளை நேரடியாக திறந்தவெளியில் விட்டுள்ளனர். இப்பகுதியில் காற்று திசை மாறி வீசும், அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோரும், குடியிருப்பவர்களும், துர்நாற்றத்தால் கடும் அவதிபடுவதாகவும், இது குறித்து நகராட்சி ஆணையர் முரளி, மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளரான பணீந்திர ரெட்டியிடமும், தலைமை செயலகத்திற்கும் ஓர் ஆண்டாக, அப்பகுதி மக்கள் பல முறை மனுக்களை அனுப்பி உள்ளனர். ஆனால், ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை உரிய நடவடிக்கை கல்வி நிறுவனத்திடம் உள்ள விசுவாசத்தால் (கட்டிங்) நன்றி கடனாக நடவடிக்கை எடுக்கமல் விட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் நொந்து போய் உள்ளனர். அந்தப் பகுதி அருகே சாய்பாபா கோவில் ஒன்றும் உள்ளது. அதில் அன்னதானமும் அவ்வப்போது பக்தர்கள் வழங்கி வருகின்றனர். துர்நாற்றத்துடனேயே கோவிலில் அமர்ந்து அன்னதானம் வழங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் பக்தர்கள் குறைபட்டு கொள்கின்றனர். மேலும், அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டம், தனிநபர் கழிப்பறை என பல்வேறு திடடங்களை பல ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தி வரும் வேளையில், பெரம்பலூரை சேர்ந்த தனியார் பள்ளி கழிப்பறை கழிவு நீரை திறந்த வெளியில் விட்டுள்ளதால் பொதுமக்களின் குடிநீர் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் கிணற்றில், கழிப்பறை கழிவு நீர் கலந்து வாந்தி பேதி, காலரா உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்பாக தடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் அதிகாரிகள் கையூட்டுக்கு மட்டும் பணிபுரியாமல் வாங்கும் சம்பளத்திற்கு கடமைக்காகவது பணிபுரிய வேண்டும் என்பதே பெரம்பலூர் நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!