Tollgate employees scramble near Perambalur: Vehicles went free.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்க சாவடியில் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சென்றன.
திருமாந்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவரி வசூல் சாவடி மையம் (டோல்கேட்) உள்ளது. இந்த டோல்கேட் வழியாக தினமும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த டோல்கேட்டில் சுங்கவரி வசூல் செய்யும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு வழங்க வேண்டியும் பணி பாதுகாப்பு கோரியும் கடந்த ஒருவார காலமாக கறுப்பு பேட்ச் அணிந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் கோரிக்கையை ஏற்காத நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்ர்ஸ் யூனியன் சார்பில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சுங்கவரி வசூல் செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தை துவக்கினர். இதனால் சென்னை ‘ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் இலவசமாக சென்றன.
திருமாந்துறை டோல்கேட் பகுதியில் மங்களமேடு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து மனு அளித்தனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.