Tomato price fall series: the purchase of Rs 5 per kg. 10 Sales: Perambalur Farmers agony
கடந்த ஆண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால், அதே போல இந்த ஆண்டும் நல்ல விலைக்கு கிடைக்கும் என நம்பிய பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திரூப்பூர், கோவை மாவட்ட உழவர்கள் அதிக அளவில் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து ஒட்டன்சத்திரம், தலைவாசல், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு தக்காளி வரவு அதிகரித்து இருப்பதால்,
கடந்த வாரம் கிலோ ரூ. 25 முதல் ரூ. 20 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ.10-க்கும் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. ஆனால், விவசாயிகளிடம் கிலோ. ரூ. 5 என்ற அளவிலேயே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.