தற்போது உயர்ந்துள்ள தக்காளி விலையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து ஹோட்டல்களில் தக்காளி சட்னி மற்றும், தக்காளி சாதம் விற்பனை கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூ.68 முதல் ரூ. 100 வரை தரத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்துக் குறைவே விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த கடும் விலை ஏற்றத்தின் காரணமாக இட்லி, தோசைகளுக்கு ஹோட்டல்களில் வழங்கப்பட்டு வந்த தக்காளி சட்னி தற்காலிகதாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும், இதே போன்று தக்காளி சாதமும் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்கள் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.
இந்த விலை ஏற்றத்தால் குடும்ப பெண்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.