Tour for women representatives of local bodies to see archeological remains: Collector Venkatabriya inaugurated today.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பின் பெண் பிரதிநிதிகளுக்கு, கரம்பியம் தொல்படிமம், சாத்தனூர் கல் மரம், அமோனைட்ஸ் மையம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட செல்லும் ஓர் நாள் கள பயணத்தினை கலெக்டர் வெங்கட பிரியா, இன்று காலை பெரம்பலூரில், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், கரம்பியம் மற்றும் பிலிமிசை உள்ளிட்ட பகுதிகளில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் சூழப்பட்டு இருந்தபோது, கடலுக்கடியில் வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியவை காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரிய வந்தது. ஆலத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனுாரில் கோனிபர்ஸ் வகையை சார்ந்த (பூக்கள் தோன்றாத) அடிமரம் ஒன்று கல்மரமாக காட்சியளிக்கின்றது. புகழ்பெற்ற புவியியல் அறிஞர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணன், 1940ஆம் ஆண்டு இந்த கல்மரத்தை கண்டறிந்து உறுதி செய்தார்.

அதுமட்டுமல்லாது அம்மோனைட் எனப்படும் தலைக்காலி கடல்வாழ் உயிரினமானது சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஐந்தாவது பேரழவின்போது டைசோனர்களோடு சேர்ந்த இந்த வகை உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வியல் அறிஞர்கள், வல்லுநர்கள் ஆதராப்பூர்வமாக தெரிவிக்கின்றனர்.

இந்த பூமியில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட அம்மோனைட் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 150க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் நமது பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

இச்சிறப்புக்குறிய நமது பெருமைமிகு பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பினை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் முதற்கட்டமாக பெண் தலைவர்களுக்கான சிறப்பு ஓர் நாள் கள பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இன்றைய களப் பயணத்தில் 65 கிராம ஊராட்சி தலைவர்கள், யூனியன் சேர்மன்கள், மாவட்ட கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோரை தொல்லியல் ஆராய்ச்சியாளர் பிரசாத் ஒருங்கினைத்து, இது குறித்து எடுத்துரைப்பதற்காக இந்த களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!