Traders their details of goods and services tax (GST) should register on the website – CST

வணிகவரித்துறை விடுத்துள்ள அறிவிப்பு:

சரக்கு மற்றும் சேவை வரி (GST) விரைவில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் தங்கள் விவரங்களை 01.01.2017 முதல் http://www.gst.gov.in, என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

வணிகர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் தங்களது மின்னஞ்சல் மற்றும் இணையதளம் https:/ctd.tn.gov.in மூலம் பெறப்பட்ட தற்காலிக ஐ.டி.(ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உபயோகித்து பதிவு செய்துகொள்ளவேண்டும். ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https:/ctd.tn.gov.in இணையத்தில் உள்ள உதவிப்கோப்பை (Helpline) பயன்படுத்திக்கொள்ளலாம்.

வணிகவரித்துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரிவிதிப்பு வட்டங்களில் தெரிந்துகொள்ளலாம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!