Training on Integrated Pest Disorder Management in Maize: Namakkal Agricultural Science Center
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 30ம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணிக்கு மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் விதை நேர்த்தி, இளம் குருத்து புழுவை கட்டுப்படுத்துதல், முட்டை உண்ணி மற்றும் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், வேதியியல் முறை மற்றும் உயிரியல் முறையில் பூச்சி மேலாண்மை நிர்வாகம் குறித்த தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக கற்றுத்தரப்படும்.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நாளை 30ம் தேதி காலை 10 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.