Trichy International Airport Advisory Board Member TR Sivasankar requests to start direct flight service between Trichy and Coimbatore!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஆலோசனை குழு கூட்டம், நேற்று, திருச்சி விமான நிலைய கூட்ட அரங்கில் ஆலோசனை குழு தலைவர் திருச்சி எம்.பி., துரை வைகோ தலைமையில் நடந்தது. விமான நிலைய மேலாளர் முன்னிலை வகித்தார். நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலையத்தின் மேம்படுத்தும் கோரிக்கையையும் மற்றும் சிறு பிரச்சனைகளையும் தீர்க்க கோரி திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய இயக்குநர் எஸ். ஞானேஸ்வர ராவிடம் திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில்,

திருச்சி விமான நிலையத்தில், பயணிகள் சுமார் 3 கி.மீ தூரம் நடக்க வேண்டியிருப்பது முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. அரசு பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். டெர்மினலுக்குள் போதுமான உணவகங்கள் மற்றும் விற்பனைக்கான கடைகள் இல்லை. நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு, பானம் அல்லது அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம் உள்ளது. இரவு உணவகம் (Night Canteen) வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

சில சுமை வண்டிகள் (trolleys) சரியாக பராமரிக்கப்படவில்லை, பார்கோடு / என்கோடிங் பிரச்சினைகள் உள்ளது. மருந்துக் கடை டெர்மினலுக்கு வெகுதூரத்தில் உள்ளதால் அவசர நிலைகளில் அணுகுவது கடினமாகிறது. கழிப்பறைகள் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை. குடிநீர் வசதிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். காலை 8:00 மணி முதல் செய்யப்படும் அறிவிப்புகள் (Announcements) எல்லா இடங்களிலும் தெளிவாக கேட்கப்பட வேண்டும். விமான நிலைய Wi-Fi சேவை நிலையானதாக இல்லை. பல சார்ஜிங் பாயிண்ட்கள் செயல்படவில்லை.

சென்னை – திருச்சி இடையே அதிகமான விமான சேவைகள் ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி – கோயம்புத்தூர் இடையே நேரடி விமான சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். விமான நிலைய டோல் கியோஸ்கில் உள்ள Fast Track வசதி சரியாக இயங்கவில்லை. பாதுகாப்பு பெண்கள் பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன நிறுத்தம் மற்றும் காத்திருக்கும் இடங்களில் போதுமான விளக்குகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

VVIP லவுஞ்ச் Wi-Fi வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனி VVIP கழிப்பறைகள் இருந்தாலும் அவை சரியான பராமரிப்பின்றி உள்ளன. இந்த குறைபாடுகள் பயணிகள் வசதி, செயல்திறன் மற்றும் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளன. உடனடி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், பயணிகள் திருப்தியும் விமான நிலைய நம்பகத்தன்மையும் அதிகரிக்கும், என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மான நிலைய இயக்குநர் எஸ். ஞானேஸ்வர ராவ் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.சிவசங்கரிடம் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!