Trying to the road block in two places with the evacuation of drinking water in Perambalur: the authorities are compromised

பெரம்பலூரில் 15 நாட்களாக முறையாக வினியோகம் குடிநீர் செய்யாததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் முயற்சித்தனர், அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட இருவேறு இடங்களில் தண்ணீர் வினியோகம் செய்யாததை கண்டித்து இன்று காலை, ரோவர் ஆர்ச் பகுதி, மற்றும் கம்பன் நகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இன்று பாமக பந்த் அறிவிப்பிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலை தடுத்து நிறுத்தினர். பின்னர், போலீசர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அலுவர்களிடம் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு பாரதிதாசன் நகர் உள்ளிட்ட தெருக்களிலும், 15 வது வார்டு கம்பன் நகர் உள்ளிட்ட தெருக்களிலும் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும், மேலும், காவரி – கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வினியோகிக்கப்டும் தண்ணீர் குழாயில் காவிரி நீருக்கு பதிலாக உப்போடை நீர் வினியோகம் செய்யப்படுபவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், வசதியற்ற தங்களுக்கு வினியோகம் செய்யாமல் வசதி உள்ளவர்களின் வீடுகளுக்கு பூமிக்கு அடியில் தோண்டி அமைக்பபட்டுள்ள தொட்டியில் பாய்வதாகவும் குற்றம் சாட்டும் அவர்கள், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம், ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், அவர்களது வீடுகளில் அடிபம்பு கூட இல்லாததால் அக்கம் வார்டுகளில் உள்ள தொட்டியில் உள்ள நீரை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் இன்று மாலை 7 மணிக்குள் தண்ணீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!