Twelfth grade public choice: in Perambalur wrote nearly 9,200 people.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி 31.03.2017 முடிய 24 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வில் 4,701 மாணவர்களும், 4,569 மாணவிகளும் ஆக மொத்தம் சுமார் 9,200 பேர் தேர்வு எழுதி உள்ளனர் உள்ளனர். தேர்வு மையங்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராக 32 தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 24 தேர்வு மையத்திற்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 32 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
9 வழித்தடங்களில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு. இத் தேர்வுக்கு பணியில் 692 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளராக 546 ஆசிரியர்களும், 73 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.