Two coconut trees burned in lightning in the rains near Perambalur.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது.
இதில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பாலையூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி (55) என்ற விவசாயிக்கு சொந்தமான வயலில் உள்ள இரண்டு தென்னை மரங்களின் மீது பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் மரங்கள் தீப்பற்றி எரிந்தது. இதனிடையே தென்னை மரங்களில் மின்னல் தாக்கிய போது அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.