Two-Wheeler Vehicle Grants Program for Women subsidy: Apply for LLR

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெண்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லும் சிரமங்களை உணர்ந்து பணிபுரியும் இடத்திற்கு எளிதில் செல்லும் வகையில் அம்மா இருசக்கர வாகனம், வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25,000- இவற்றில் எது குறைவோ அத்தொகையினை பணிபுரியும் பெண்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக வழங்கபட உள்ளன.

இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 810 பெண்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் 05.02.2018 க்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளா;ச்சி அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (அலுவலக வேலை நாட்களில்) விண்ணப்பங்களை பெற்று சமர்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பப் படிவத்துடன் பணிபுரிவதற்கான சான்றுகள், ஓட்டுநர் உரிமம் அல்லது LLR இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுச் சான்று மற்றும் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் பூர்த்தி செய்து நேரிலோ, அல்லது பதிவு அஞ்சலிலோ, விரைவு தபாலிலோ அனுப்பி வைக்கலாம்.

இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் பொழுது இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் அல்லது LLR பெற்று இருந்தாலும் விண்ணப்பிக்கலாம், பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000- க்கு மிகாமலும், வேலை செய்யும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்ற பெண்கள், 35 வயதிற்கு மேல் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், அமைப்புசார் மற்றும் அமைப்புச்சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு நிதியுதவி பெறும் நிறுவனம்ஃதனியார் நிறுவனம்ஃஅரசு திட்டங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்களில் ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் தினக்கூலி வேலை செய்யும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களும் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறைந்தபட்டசம் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். எனவே இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற இருசக்கர ஓட்டுநர் உரிமம் அல்லது LLR பெற்றவுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பணிபுரியும் மகளிர் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!