Typing Exams started in Perambalur : 1459 participants
பெரம்பலூரில் இரண்டு நாட்கள் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் இன்று காலை தொடங்கியது, இதில்1459 பேர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தொழில் நுட்பத் துறை நடத்தும் தட்டச்சு தேர்வுகள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. தட்டச்சு தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
தட்டச்சு தேர்வுகளில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 239 பேரும், சீனியர் கிரேடில் 160பேரும்,
ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 739 பேரும், சீனியர் கிரேடில் 292 பேரும், ஆங்கிலம் உயர்வேகத் தேர்வில் (ஹைஸ்பீடு) 2 பேரும் என மொத்தம் 1459 பேரும் பங்கேற்றனர்.
முதல்நாள் ஜூனியர் கிரேடில் – 4 தொகுதிகளாகவும், சீனியர் கிரேடில் 1 தொகுதி என மொத்தம் 5 தொகுதிகளில் நடந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பங்கேற்று தட்டச்சு செய்தனர் .
2-வது நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூனியர் ஒரு தொகுதியும், சீனியா; கிரேடில் 3 தொகுதியினரும், புதுமுக இளநிலைபிரிவில் 2 தொகுதி, உயர்வேகத் தேர்வில் 2 தொகுதிகள் என மொத்தம் 8 பாட்சுகளில் பங்கேற்க உள்ளனர் என்று மைய முதன்மை கண்காணிப்பாளர் கல்லூரி முதல்வர் பி.எல். சுப்ரமணியன் தெரிவித்தார். துணை மைய கண்காணிப்பாளர் சரண்யா மற்றும் 13 அறை கண்காணிப்பாளர்கள், தட்டச்சு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கணினியில் வேகமாக தட்டச்சு செய்திடவும், தனியார் மற்றும் அரசுத் துறையில் வேலைவாய்ப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும் தட்டச்சு தேர்வினை மாநிலம் முழுவதும் 102 மையங்களில் ஒரு லட்சத்து 52ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளதாகவும்,
தட்டச்சு தேர்வு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா;களுக்கு அரசு மூலம் நடப்பு (2017) ஆண்டில் 2200 பேருக்கு வேலைகிடைக்க வாய்ப்புள்ளதாக பெரம்பலூர் மாவட்ட தேர்வு மைய பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.