Udumpiam: Rs .1.94 crore welfare payments

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.கந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களிடமிருந்து 630 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 125 மனுக்களுக்கு உடனடி தீர்வும், 263 மனுக்கள் நிராகரிப்பும், 242 மனுக்களுக்கு உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் 280 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா;ச்சித் துறையின் கீழ் ரூ.76,03,000 மதிப்பிலான 32 பணிகளுக்கு, பணி ஆணைகளையும்,

கனிமம் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகளையும்,

கால்நடைத்துறையின் கீழ் கோழிபண்ணை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ரூ.32,375 மதிப்பிலான காசோலைகளையும்,

கூட்டுறவுத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.43,59,000 மதிப்பிலான சுய உதவிக்குழு கடன்களும், சமூகநலத்துறையின் சார;பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு ரூ.52,131 மதிப்பிலான முதிர;வு தொகைகளையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.7,66,363 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

தோட்டக்கலைத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு ரூ.6,85,900 மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகளையும், பால் வளத் துறையின் சார்பில் தலா ரூ.500 மதிப்பில் 16 நபர்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான பால் சேகரிக்கும் கலன்களையும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.3,515 மதிப்புடைய விலையில்லா தையல் இயந்திரங்களை 5 நபர்களுக்கும், ரூ.4,650 மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளை 7 நபர்களுக்கும்,

புது வாழ்வுத் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் திட்டம் மூலம் 20 நபர்களுக்கு ரூ.3,55,000 மதிப்பிலான கடனுதவிகளையும், 2 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1,00,000 மதிப்பிலான அமுத சுரபி கடனுதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் ரூ.1,00,000 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும்,

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 நபர்களுக்கு ரூ.4,00,000 மதிப்பிலான தொழிற்கடன்களும், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு 1,05,200 மதிப்பிலான பால்கறவை இயந்திரம், புல் நறுக்கும் இயந்திரம் மற்றும் மின் கலன் தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பிலான வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகைகளையும், மின்சாரத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கு ரூ.14,63,876 மதிப்பிலான இலவச விவசாய மின் இணைப்புகளையும்,

வருவாய்த்துறையின் சார்பில் 100 நபர்களுக்கு சாலை விபத்து நிவாரண உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை என மொத்தம் ரூ.23,30,000 மதிப்பிலான உதவித்தொகைகளையும்,

வேளாண்துறையின் சார்பில் சுழற்கலப்பை, பவர்டிரில்லர் மற்றும் நீர்கடத்தும் குழாய் என 23 பயனாளிகளுக்கு 10,32,000 மதிப்பிலான உதவிகள் என மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூ.1,94,43,970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) புஷ்பவதி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) ராஜகோபால், வட்டாட்சியர் மருதைவீரன், வட்டாட்சியர் (ச.பா.தி) ஏழுமலை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!