Under the multi-purpose farm pond aquaculture ponds forming scheme can to apply

மீன் வளத்துறையில் செய்துள்ள அறிவிப்பு:

தமிழக அரசு 2017-18-ம் ஆண்டு பல்நோக்கு பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள் 2,500 ச.மீ பரப்பில் புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கவும், ஒருமுறை உள்ளீட்டு செலவினத்திற்கும் அலகு ஒன்றுக்கு ரூ.1,28,500- ல் 50 சதவீத மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றது.

மேற்க்கண்ட திட்டத்தின் கீழ் மீன்வளர;ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் சொந்த நிலமும், குத்தகை நிலமெனில் 10 வருட குத்தகை ஒப்பந்தம் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் அரியலூர; மாவட்ட ஆட்சியரக இரண்டாவது தளத்தில் செயல்படும் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 – 228699 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய அருகிலுள்ள எஸ்.கே.சி வளாகத்திலுள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தையோ தொடர்புக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!