Under the project of karkum bharatham, the choice of India on March 19 to basic literacy
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், 15 வயதிற்கு மேல் 80 வயதிற்குள் உள்ள எழுதபடிக்க தெரியாதவர்கள் அனைவருக்கும் 19-03-2017 அன்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 284 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இத் தேர்வு நான்கு ஒன்றியங்களில் உள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடு நிலைப் பள்ளிகளில் 19.03.2017 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வினை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்ற கல்லாதவர்களும் இத்தேர்வினை எழுதலாம். மேலும் கடந்த முறை நடந்து முடிந்த தோ;வுகளில் தோ;ச்சி பெறாதவா;களும் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.