unidentified vehicle rammed at the death of the young men near perambalur
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே திருச்சி சென்னை தேிய நெடுஞ்சாலையில் ஊத்தங்காலை சேர்ந்த சரவணன் (வயது 28), இவரும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு இருவரும் பாடாலூரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். தங்கராசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் தேடி வருகின்றனர்.