Used Government Vehicles Auction: Perambalur Collector Notice!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் TMG 0187 மகேந்திரா ஜீப் மற்றும் TN 09 G 0391 டெம்போ ட்ராக்ஸ் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்டு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 10.10.2022-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 10.10.2022 அன்று காலை 10 மணி முதல் 10:30 மணிக்குள் நுழைவு கட்டணம் ரூ.50 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கான முன்வைப்பு தொகையாக ரூ.2,000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்ட ஏலதாரர் ஏலத் தொகையில் 100% மற்றும் அதற்கான GST 18% தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அதன் பின்னர், ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.