Vacancies of Noon Meal Organizer, Chef and Culinary Assistant in Perambalur District Schools

model

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 40 சத்துணவு அமைப்பாளார், 42 சமையலர், 60 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிப்பதற்கு தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் செப்.24 முதல் செப்.30 தேதி வரை மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல், தபால் மூலமாகவோ சேர்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்கவேண்டும். சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்கவேண்டும். மாதிரி விண்ணப்ப படிவங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி மற்றும் தோல்வி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.

01.09.2020 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.

பள்ளி சத்துணவு மைய சமையலர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.09.2020 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.

பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.09.2020 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் , கல்வித் தகுதி சான்று, மதிப்பெண் சான்று, இருப்பிடச் சான்று விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கும், இருப்பிடத்திற்கும் இடையேயுள்ள தூர சான்று, சாதி சான்று, வருமானச் சான்று, விதவை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவராக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்று, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்று போன்ற சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நேர்முக தேர்வின்போது அசல் சான்றுகளை காண்பிக்கவேண்டும் என தெரித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!