vadakkumadavi-mcp
vadakkumadavi-mcpவடக்குமாதவி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா : ரூ.1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா வடக்குமாதவி கிராமத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் மூலம் நத்தம் வீட்டு மனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரத்து 700- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் 1 பயனாளிக்கு ரூ.10,000- மதிப்பிலான விசைத்தெளிப்பான் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.50,000- மதிப்பிலான பி.வி.சி. பைப்புகள் உள்ளிட்டவைகளையும், ஆக மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.1,26,35,700- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 107 மனுக்கள் வரப்பெற்று, 77 மனுக்கள் ஏற்கப்பட்டும், 30 மனுக்கள் மீது உரிய விசாரணைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ரா.பேபி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா;வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், பொன்னுதுரை(சமூக பாதுகாப்பு திட்டம்), உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!