Various Development Projects worth Rs.21.15 Crores: Tamil Nadu Transport Minister Sivasankar inaugurated!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட பல்வேறு தார் சாலை, சிமெண்ட் சாலை, போன்ற சாலை அமைக்கும் பணிகளையும், கிணறு வெட்டும் பணி, விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு என மொத்தம் ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
மாநில அரசு நிதியுதவியின்கீழ், தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையுள்ள 5 கி.மீ நீளமுள்ள மண் சாலையினை தரம் உயர்த்தி ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும், பரவாய் முதல் வரகூர் வரையுள்ள 4.5 கி.மீ நீளமுள்ள மெட்டல் சாலையினை தரம் உயர்த்தி ரூ.10.9 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும்,
அந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.13.79 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியினையும், வரகூர் ஊராட்சி வடக்கு தெருவில் ரூ.10.57 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சி தெற்கு தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.14.32 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சியில் வரகூர் முதல் கொளப்பாடி வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பரவாய் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியினையும், சின்னபரவாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.32 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கல்லம்புதூர், ஆண்டிகுரும்பலூர் கிராமங்களில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லபிள்ளை, உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.