VCK Leader Thirumavalavan opened the library near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட வயலப்பாடி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வெட்டுடன் கூடிய கொடியை மாவட்டசெயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்றி வைத்தார்.
பின்னர் அருகில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் ஆ.நந்தன், மூ.கதிரவன் மாவட்ட செய்தித்தொடர்பாளர் மு.உதயகுமார் மாவட்ட நிர்வாகிகள் வயலை செந்தில்வளவன், திருமா.முத்து, ஆதி.வளர்மதி, மருதமுத்து,சுப்பிரமணி, வேலு, வெஙகடாலம், மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.