Vehicle accident cases filed on the Internet: Perambalur District inaugurated ADSP Gna.Sivakumar

பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் தொடர்பான ஆவணங்களை சிசிடிஎன்எஸ் திட்டத்தில் பதிவேற்றம் செய்வதை ஏ.டிஎஸ்பி ஞான.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசு, தேசிய அளவிலானகுற்றம், குற்றப்பின்னணி கண்டறியும் வலைப்பின்னல் (சி.சி.டி.என்.எஸ்.,) (CCTNS) திட்டத்தை, நீதி மன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டப்படி, காவல் நிலையத்தில் பதிவாகும், ஒவ்வொரு வழக்கின் விவரம், குற்றவாளிகளின் முழு தகவல், விபத்து, தற்கொலை, கொலை போன்ற சம்பவங்களில் இறப்பவர்களின் தகவல்கள், படத்துடன் கணினியில் பதிவு செய்யப்படும். இவற்றை, தேசிய அளவில், எங்கிருந்தும், போலீசார் பார்க்கும் வசதி உருவாக்கப்பட்டது. இதற்காக, “சிப்ரஸ்” என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டது

இந்நிலையில், இன்று முதல் வாகன விபத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிசிடிஎன்எஸ் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது. பெரம்பலூர் காவல் நிலையத்தில் வாகன விபத்து வழக்குகளின் ஆவணங்களை சிசிடிஎன்-ல் பதிவேற்றம் செய்யும் முறையை பெரம்பலூர் மாவட்ட டி.எஸ்.பி, ஞான.சிவக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இந்த முறை பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் பின்பற்றப்படும்.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று முதல் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வாகன விபத்து தொடர்பான ஆவணங்கள் சிசிடிஎன்எஸ் திட்டத்தின் சிப்ரஸ் மென்பொருள் வாயிலாக பார்வை மகஜர், மாதிரி வரைபடம், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி சான்றிதழ், வாகன காப்பீட்டு சான்றிதழ், மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் சிசிச்சை சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட வாகன விபத்து வழக்கு ஆவணங்கள் 01.04.2017 முதல் ஆன்லைன் மூலமாக காப்பீட்டு அலுவலகம் மற்றும் MCOP Court / Claim Tribunals (Motor Vehicle Claim Original Petition) அனுப்பப்பட இருக்கிறது. மேலும் தேவையான ஆவணங்களை இணையதளம் மூலம் அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காவல்நிலைய ஆளினர்கள் அனைவரும் வாகன பதிவு சான்றிதழ் ஓட்டுநர் உரிமம், தணிக்கை செய்ய State Transport Authority Website-யை (www.tntsta.gov.in) பயன்படுத்திக் கொள்ளலாம்.

காவல் நிலையத்தில் உள்ள அனைத்து வழக்குகளும், 1980 முதல் 2010 வரை பதிவு செய்யப்பட்ட முக்கியமான வழக்குகளும் 2011 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் http://www.eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index என்ற இணையதளம் மூலம் பார்க்கலாம். கடந்த 02.06.16 முதல் காவல் தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காக மின் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் இணையதள முகவரி http://mail.tncctns.gov.in ஆகும்.

கடந்த 02.10.16 முதல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு (Computer Generated FIR) நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 06.02.2017ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி கணிணி வழி கைது படிவம் (IIF – II) பிணையப்பத்திரம் / கைதி குறிப்பாணை / காவல் அடைப்பு அறிக்கை (Bail Bond / Arrest Intimation / Remand Report) தயார் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், கார்த்திகேயன், பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, அங்கு, உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!