vellantanki Amman, pattappan, sri kasimuni temple consecration ceremony is tomorrow at perambalur
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பெரியார் தெருவில் வெள்ளந்தாங்கி அம்மன், பாட்டப்பன், ஸ்ரீகாசிமுனி ஸ்ரீஊர்சுத்தியான், ஆகிய பரிவார தெய்வங்களுக்கு நாளை காலை 10.30 மணி அளவில் வேதவிற்பன்னர்கள் மூலம் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இன்று மாலை யாக பூஜையும் நடக்கிறது. நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி தீர்த்தம் வெங்கடேசபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.
விழாவிற்ககான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், 11. 12, 13 வார்டு பொதுமக்கள் சார்பில் செய்து வருகின்றனர்.