Vellaru Joint Drinking Water Project in Veppur Panchayat Union; The Chief Minister laid the foundation stone through a video Conferance

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , பெரம்பலூர் மாவட்டம வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 73 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தினை கானொளி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் (பொ) ராஜேந்திரன் மரக்கன்றுகளை நட்டார்.

கடந்த 07.03.2018 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தின்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 73 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, பெண்ணகோணம் அருகே செல்லும் வெள்ளாற்றில் நீர் உறிஞ்சுகிணறு அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, அரசு ஆணை எண்.23 நாள்.13.02.2020ல் ரூ.22.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, நபார்டு வங்கி நிதி மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

வேப்பூர் ஒன்றியத்தில் தற்போதைய 2021ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை 62,386 பேர்களுக்கு 2.91 மில்லியன் லிட்டர் குடிநீரும், 2035ஆம் ஆண்டு 74,589 நபர்களுக்கு 3.47 மில்லியன் லிட்டர் குடிநீரும், மற்றும் 2050ஆம் ஆண்டு உச்சக்கட்டமாக 87,270 நபர்களுக்கு 4.05 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைபடும் என கணக்கிடப்பட்டு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக பெண்ணகோணம் அருகில் நான்கு உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, வெள்ளாற்றின் தென்கரை அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்திலிருந்து 66.467 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்படவுள்ள 250 மில்லி மீட்டர் விட்டமுள்ள நெகிழ் இரும்பு குழாய் முதல் 50 மில்லி மீட்டர் விட்டமுள்ள உயர் அழுத்த நெகிழி குழாய்கள் அமைத்து, தற்போதுள்ள 5 தரைமட்ட தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டப்படவுள்ள இரண்டு தரைமட்டத் தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள 71 மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் மற்றும் புதியதாக கட்டப்படவுள்ள 5 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்றப்பட்டு, ஏற்கனவே 109.54 கி.மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ள பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி 15.06.2020 அன்று கோரப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டு, தற்போது பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் கட்சசி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!