Venture theft in Perambalur Barrage: Public accusation that refuses to accept the complaint

பெரம்பலூரில் இன்று பட்டப்பகலில் 6.5 லட்சம் மதிப்புள்ள நகை ரொக்கம் துணிகர திருட்டு: போலீசார் புகார்களை ஏற்க மறுப்பதாக பொதுமக்கள் எஸ்.பியிடம் நேரடி குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

பெரம்பலூரில் இன்று பட்டப்பகலில் பூட்டி இருந்த டைல்ஸ் கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டினுள் இருந்த 22.5 பவுன் நகை மற்றும் ரூ. 1.60 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள செல்வா நகர் 5 வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சேகர் (வயது 48), அயினாபுரத்தை சேர்ந்த அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தற்போது உள்ள வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்தார். இந்நிலையில் இன்று கொளக்காநத்தம் சென்று வருவதற்காக, அவர் நடத்தி வரும் டைல்ஸ் கடையை அவரது மனைவியிடம் விட்டு சென்றிருந்தார்.

இன்று மதியம் நண்பகல் வீட்டிலும், அக்கம் பக்கத்து வீடுகளிலும், குடியிருப்பவர்களும், அலுவல் தொடர்பாக நகரத்திற்குள் சென்றிருந்ததை அறிந்த கொள்ளையர்கள் சேகரின் வீட்டை பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த 22.5 பவுன் நகை மற்றும் டைல்ஸ் உள்ளிட்ட கடைக்கு சரக்கு கொள்முதல் செய்வற்காக வைத்திருந்த ரூ. 1.60 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

வீட்டில் திருடு போனது பக்கத்து வீட்டினருக்கு தெரிய கூடாது என்பதற்காக கொள்ளையர்கள், அவர்கள் உடைத்த பூட்டையும் கையோடு எடுத்து சென்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு சேகர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை, மற்றும் தடவியல் நிபுணர்களுடன் கொள்ளையர்கள் வீட்டினுள் விட்டு சென்ற தடயத்தை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தெருவில் உள்ள சி.சி.டிவ.வி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் திருட்டு தொடர்பான புகார் வாங்க மறுப்பதாக விசாரணைக்கு வந்த எஸ்.பியிடம் பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு

பெரம்பலூர் எஸ்.பி திஷா மித்தல் கொள்ளை நடந்த வீட்டிற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். பின்னர், அங்குள்ள வீட்டு உரிமையாளர்களிடம், கொள்ளை தடுக்க வீட்டிக்கு வீடு சி.சி.டி.வி பொருத்த கேட்டுக் கொண்டார்.

காரில் ஏறி புறப்பட முயன்ற போது அங்கு வந்த பெண் ஒருவர் கடந்த ஜன.26 அன்று கொள்ளை போன 18.5 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனதற்கு புகார் அளித்தாலும் பெரம்பலூர் போலீசார் ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு பெண் ஒருவர் எஸ்.பி.யிடம் கூறும் கடந்த சில மாதங்களாகவே 5 மேற்பட்ட வீடுகளில் கொள்ளை நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட எஸ்.பி நாளை எஸ்.பி அலுவலகம் வந்து தெரிவிக்க வேண்டியும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உறுதி அளித்து சென்றார்.

பட்டப்பகலில் பூட்டிய வீட்டினுள் 22.5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1.60 லட்சம் திருட்டு போன சம்பவம் பெரம்பலூர் நகர மக்களை மேலும், அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் போலீசார் கொள்ளையர்களையும் அடையாளம் காணவதிலும், களவு போன பொருட்களை மீட்பதிலும் தொடர்ந்து பின்தங்கி உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!