Village assistants dharana urged various demands in Namakkal
நாமக்கலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமை வகித்தார்.
இதில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்க வேண்டும்.
ஜமாபந்தி படி வழங்கிட வேண்டும். இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைத்தும் நிர்ணயிக்க வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையினை ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலிறுயுத்தப்பட்டன.
இதில் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், துணைச்செயலாளர் ராசையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.