Vinayagar Chaturthi: 203 Vinayaka statues have been established in Perambalur.

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன் னிட்டு மாவட்ட முழுவதும் இன்று 203 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்டடுள்ளது. 126 சிலைகள் காவிரி ஆற்றிலும், இதர சிலைகள் வெள்ளாறு, கல்லாறிலும் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மொத்தம் 203 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றது.

விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஊர்வலங்கள் நடத்தவும், பிறகு இந்த சிலைகள் அனைத்தும் வருகிற 19ம்தேதி நீர்நிலைகளில் கரைத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 203 சிலைகளில் லப்பைகுடிகாட்டில் அலங்கரிக்கப்படும் உலோக சிலை ஊர்வலமாகக் எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்குள் வைக்கப்படும். மற்ற 202 சிலைகளில் 126 சிலைகள் வருகிற 27ம்தேதி திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

மீத முள்ள சிலை களில் மங்களமேடு, வி.களத்தூர், கைகளத்தூர் காவல் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள அருகிலுள்ள வெள்ளாற்றிலும், அரும்பாவூர் காவல் சரகப்பகுதி சிலைகள் கல்லாற்றிலும் 27ம்தேதி கரைக்கப்பட உள்ளன.

நக்கசேலம் உள்ளிட்ட சில இடங்களில் காவல் துறை அனுமதியுடன் கிணற்றில் கரைக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு 156 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் நிலைகள் இந்த ஆண்டு 203 ஆக அதிகரித்துள்ளது.

விநாயகர் சிலைகள், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத கோலமாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கு திப்பியால் தயாரிக்கப்ட்ட 3 அடி முதல் 15 அடி வரை உயரம் கொண்ட சிலைகள் தெருக்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையுடன் கொண்டாடப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!