Voter awareness rally on behalf of Siruvachur Almighty School students
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
சிறுவாச்சூரில் துவங்கிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு விஏஓ சுரேஷ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராம்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பாதாதகைளை ஏந்தி சென்று விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து கோஷமிட்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
படவிளக்கம் : பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணாக்கர்களின் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.