Waiver requesting full credit for farmers, farmers and labor union picket

விவசாயக்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கமும், இணைந்து இன்று சாலைமறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன் தலைமையில் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், , மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக்குழு தங்கவேல், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் என்.தியாகராஜன், ஆகியோர் கண்ட உரை நிகழ்த்தினர்.

மறியல் போராட்டத்தில், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும், தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் இழப்பீடுக்கான காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வறட்சியால், தற்கொலை செய்து கொண்ட அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும், இழப்பீடு வழங்க வேண்டும்,

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 5 ஏக்கருக்கு மேற்பட்ட பெருவிவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்,

வறட்சியால் வேலையின்றி தவிக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இழப்பீடு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாட்கள் வேலையினனை அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஆண்டு முழுவதும் வேலை வழங்கி தினசரி ஊதியம் ரூ.410 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக வந்த பேருந்துகளை மறித்து கோசமிட்டனர். அரும்பாவூர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பெரம்பலூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பாலக்கிருஷ்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் உதயகுமார், இருதயராஜ், வெள்ளுவாடி கலியன், அனுக்கூர் தங்கராசு, நெய்க்குப்பை பரமேஸ்வரன், கள்ளப்பபட்டி முருகன், மாதர் சங்கம் விஜயராணி, வெங்கலம் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!