Warden stabbed near Perambalur: Tired of mourning students attempting suicide

பெரம்பலூர் அருகே ஹாஸ்டல் வார்டன் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இரு மாணவிகள் மருத்துவைமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் சினேகா(14), மற்றும் பாண்டகாபாடி கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி மகள் மணிமேகலை(14), இவர்கள் இருவரும் அதே பகுதியில் அனுக்கூர் கிராமத்திலுள்ள அரசினர் மாணவியர்கள் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 6ந்தேதி மாலை பள்ளி வேளை நேரம் முடிந்ததும் தங்களது உடைகளை துவைத்து உலர்ந்த கொடி கயிற்றில் போட்டு விட்டு வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

விடுமுறை முடிந்து திங்கள் கிழமை காலை நேரடியாக பள்ளிக்கு சென்று விட்டு மாலை விடுதிக்கு திரும்பி வந்து பார்த்த போது கொடி கயிற்றில் போட்டு சென்ற உடைகள் விடுதி உதவியாளர் சந்திராவால் தீயிட்டு கொழுத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சினேகாவும், மணிமேகலையும் ஏன் எங்களது ஆடைகளை தீயிட்டு கொழுத்தீனீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு எத்தனை நாட்கள் ஆடைகளை கொடி கயிற்றிலேயே போட்டு விட்டு செல்வீர்கள் அதனால் தான் தீயிட்டு கொழுத்தினோம் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து நடந்தவற்றை மாணவிகள் இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர் விடுதிக்கு சென்று காப்பாளர் நிரோஷா மற்றும் உதவியாளர் சந்திராவிடம் ஏன் எங்கள் மகள்களின் ஆடைகளை தீயிட்டு கொழுத்தீனீர்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டியது தானே என நியாயம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து பொற்றோர் சென்றதும் மாணவிகள் இருவரையும் அழைத்து விடுதியில் நடக்கும் விசயங்களை ஏன் பெற்றோர்களிடம் தெரிவித்தீர்கள் என தகாத வார்த்தையில் கடுமையாக பேசியுள்ளனர்.

இதன் காரணமாக மனமுடைந்த மாணவிகள் சினேகா, மணிமேகலை ஆகிய இருவரும் இன்று விடுதியிலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் வழியில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

இதனையறிந்த ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவிகள் இருவரையும் மீட்டு அனுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து மங்களமேடு போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நிரோஷா மற்றும் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவிகள் இருவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவ, மாணவியர்கள் பெற்றோர் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!