Waste water tank cleaning crew to do the cleaning with safety equipment: In Perambalur municipal commissioner.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தலைமை வகித்த நகராட்சி ஆணையர் முரளி மேலும் பேசியது: பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய வேண்டும்.
மேலும், உணவக நிர்வாகத்தினர், பணியாளர்கள் நச்சுத் தொட்டியை சுத்தம் செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணி செய்கிறார்களா, என்பதை கண்காணிப்பதுடன், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்தால், உணவக உரிமையாளர்கள் பணி செய்யத அனுமதிக்கக்கூடாது.
நச்சு தொட்டிகளிலிருந்து அகற்றப்படும் கழிவுநீரை துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் மேலாண்மை திட்ட தொட்டியில் மட்டுமே ஊற்ற வேண்டும். பெரம்பலூர் நகரப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் முன்வர வேண்டும் என பேசினார்.
உணவக சங்க நிர்வாகிகள், கழிவு நீர்த் தொட்டி சுத்தம் செய்யும் மற்றும் பாதள சாக்கடை சரி செய்யும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.