water supply system could not be, In Perambalur near officer at the public captured

பெரம்பலூர் அருகே முறையாக தண்ணீர் வினியோகம் செய்யாத ஊரக வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பெரும் பரபரப்பபு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ளது வேலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராஜாவிற்கும், தற்போதைய பெரம்பலூர் எம்.பியுமான மருதைராஜா இருவருக்கும் சொந்த ஊராட்சியாகும்.

இந்த ஊராட்சியில் 5 ஆண்டுகளாக குடிநீர்க்காக கீழக்கணக்காய் பகுதி மக்கள் பல முறை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் பல முறை மனு கொடுத்துவிட்டனர்.

குறிப்பாக அந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. பல முறை சாலைமறியல் அதிகாரிகள் சிறைபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அந்த ஊர் வழியாகத்தான் மத்திய அரசின் ராஜீவ் காந்தி கொள்ளிடம் (காவேரி) கூட்டு குடிநீர்த்திட்டத்தின் ராட்சத குழாய்கள் செல்கிறது. ஆனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தொடர்ந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வன்மத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

வழக்கும் போலவே இந்த முறையும், கடந்த 20 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊரக வட்டார வளர்ச்சித் துறை அதிகரி ஆலயமணியிடம் செல்போனில் தகவல் தெரிவித்து தண்ணீர் வரவில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறை கூறினார்.

தண்ணீர் வரும் பிரச்சனை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால், நேரடியாக வருவதாக தெரிவித்தன் பேரில் சென்றுள்ளார். அப்போது குழாயில் தண்ணீர் வந்துள்ளது. பின்னர், வழக்கம் போல் அதிகாரி சென்றவுடன் அப்பகுதி மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்தவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை சிறை பிடித்த பொதுமக்கள், தாங்கள் குடங்களில் தண்ணீர் பிடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டுமென கூறி சிறைபிடித்து கொண்டனர்.

அதிகாரியை சுமார் காலை 9மணி முதல் சுமார் மதியம் 12 மணி வரை சிறைப்பிடித்தனர். 3 மணி நேரம் பொதுமக்களிடம் சிக்கிய அதிகாரி வீதியாக தண்ணீர் வருவதை பார்வையிட்டு உறுதி செய்தார்.

தண்ணீர் ஆப்பரேட்டர்களும் உடன் இருந்தனர். வேறு பகுதியில் இருக்கும் தண்ணீர் ஆப்பரேட்டர்கள் தண்ணீரை திருப்பிவிடுவதாகவும், அதிகாரி அவர்களை கண்டிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிகாரியை 3 மணி நேரம் சிறைப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!