Newspaper reporter killed in Perambalur road accident!

தமிழ் திரைப்பட நடிகர் விக்ரமுடன், செய்தியாளர் அண்ணாசாமி.
பெரம்பலூர் நகரில் இன்று மாலை நடந்த சாலை விபத்தில் செய்தியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் மகன் அண்ணாசாமி (40). இவர், சென்னையிலிருந்து வெளியாகும் மாலை தமிழகம் நாளிதழில் பெரம்பலூர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இன்று மாலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணா தியேட்டர் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக, சாலையில் இருந்து சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் சமபவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.