Women eligible to apply for Kalpana Chawla Award
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா தகவல் :
2017-2018-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு எந்த துறையிலும் வீரத்துடன், துணிவு மற்றும் தையரிமாக செயல்படும் ஒரு பெண்ணிற்கு இவ்விருது தமிழக அரசு சார்பாக வழங்கப்படும்.
எதிர்வரும் 15.08.2017 சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் இவ்விருது வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள பெண்கள் தங்களுடைய முழு விவரங்களுடன், தங்களுடைய சாதனைக்கான ஆவணங்களுடன் 5.06.2017-ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது 10.06.2017-ம் தேதிக்குள் தமிழக அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.