Work abroad: goondas act on cheating agents is needed: Pon. Kumar
வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் ஏஜென்டுகள் மீது குண்டர் சட்டம் பெரம்பலூரில் தமிழக விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பொன்.குமார் வலியுறுத்தல்.
பெரம்பலூர் : தமிழக விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பொன்.குமார் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :
வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். விசாவில் குறிப்பிட்டுள்ளபடி வேலை வழங்குவதில்லை. மாற்று வேலை செய்ய வற்புறுத்தல் செய்யப்படுகின்றனர்.
வேலைப்பளு அதிகம், சம்பளம் குறைவு, கொத்தடிமைகளாக பலர் பணியாற்றி வருகின்றனர். இராமநாதபுரம்,தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.
வொளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்களின் நலனை காத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டிற்கு 70 ஆயிரம் கேடி பில்லியன் டாலர் வருமானம் கிடைத்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயருவோருக்காக தொடங்கப்பட்ட நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு சென்று நாடு திரும்பி வாழ்வை இழந்து நிற்போரின் வாழ்வை மறுசீரமைப்பு செய்திட , அவர்கள் தொழில் தொடங்கிட வங்கிகள் மூலம் கடன் உதவி, கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பிபடி சிவகங்கை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் பாஸ்போர்ட் எடுத்துள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்வோர் வாக்களித்திட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. புலம்பெயருவோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறை சார்ந்தவர்களை ஒருங்கிணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிசம்பர் 8ந்தேதி புலம்பெயர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுவரை புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து காயமடைந்தோர், உயிரிழந்தோர் என 400பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வறுமை, வெளிநாட்டு மோகம், பொருளாதார தேவைக்காக குடும்பத்தினர் ஏற்படுத்தும் நெருக்கடியினால் பலர் வெளிநாடு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
1982 ம் ஆண்டு இமிக்கிரேசன் சட்டத்தில் திருத்தம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான ஏஜென்டுகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை இல்லை. ஏமாற்றும் ஏஜென்ட்டுகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.